எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Friday, August 20, 2004

மனைவி அமைவதெல்லாம்

பூமுகத்தின்(*) வாசலில்
சினேகம் விடர்த்தும்
பூந்திங்களானவள் மனைவி.

துக்கத்தின் முட்களை
பூவிரல் நுனியால்
புஷ்பங்களாக்குவாள் மனைவி.

எத்தனை முறை ஒளிர்ந்தாலும்
எண்ணை வற்றாத
சித்திரவிளக்கானவள் மனைவி.

எண்ணிக்கையில் தீராத
ஜன்மங்களில் என்றும்
அன்னதானேசுவரி மனைவி.

பூமியை விட
பொறுமையுள்ள
சொளபக்கியத்தேவியானவள் மனைவி.

மந்தகாச புன்னகையால்
சுட்டு நீறும் மனசில்
சந்தனம் சார்த்துவாள் மனைவி.

கண்ணீர்த்துளிகளில்
மழைவில்லை(*) வடித்தெடுக்கும்
பொன்னிறகதிரானவள் மனைவி.

காரியத்தில் மந்திரியும்
கர்மத்தில் தாசியும்
உருவத்தில் லட்சுமியுமாவாள் மனைவி.

(மம்முட்டி நடித்த ஒரு பழைய மலையாளத் திரைப்படத்தில் வரும் பாடல் இது. கருத்துச்சுவை குறையாமல் இருக்க பாடலில் வரும் சொற்களையே மற்றாமல் தந்திருக்கிறேன், சுவை குறைந்திருந்தால் அது முழுக்க முழுக்க என் கத்துக்குட்டித்தனமான மொழிப்பெயர்ப்பையேச் சாரும்.)

பி.கு 1: * பூமுகம் - வாசற்படிக்கருகில் உள்ள சிறிய அமரும் இடத்தை(SitOut) குறிக்கும். மற்றொரு அர்த்தத்தில் "பூ போன்ற முகம்" எனவும் படிக்கலாம்.

பி.கு 2: * மழைவில் - வானவில்.

பி.கு 3: வரும் 27ஆம் தேதி எனக்கு குருவாயூர் கோயிலில் திருமணம்.
வலைப்பதிவு நண்ப/நண்பிகள் எல்லோரும் வாங்க, வாழ்த்துங்க !

வழக்கம் போல் ஒரு மாத இடைவேளைக்கு பிறகு சந்திப்போம்.