எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, June 29, 2005

அராரே நிஜமோ மாயம்ந்ன்னு

எல்லோரும் அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போட்டதை நேற்றுதான் சியாட்டலில் பார்க்க முடிந்தது. எனக்கு தோன்றியவை சில:-

  1. "நன்றி: Cinema Paradiso [சென்னை] - Fight Club, Se7en, Matrix Reloaded, I know what you did last summer [ விளையாட்டரங்க உடையமைப்பிற்கு] DVD-களுக்கு" என்கிற Title card missing.

  2. நாசர் போன்ற அசத்தலான நடிகர் அச்சுபிச்சுத்தனமாக மருத்துவராய் நடித்தது சகிக்கவில்லை. அதிலும் "வேற என்ன பண்ணும்?" என்று தோள்களை குறுக்கிக் கொண்டு ஆராய முற்படுகையில் சிரிப்புத்தான் வந்தது. வெண்தாடி வைத்திருந்த அந்த உண்மையான மருத்துவரையே பேச வைத்திருக்கலாம். ["எப்படி தெரிஞ்சுகிறது?" என்று நந்தினி கேட்கையில், " எங்க தலைவரை கேளுமா"ன்னு திரையரங்கில் ஒருவர்.]

  3. சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் கொலை [ "ரொம்ப சின்ன புள்ளத்தனமாலே இருக்கு இது"] என்பதை பயம் தருமளவு தண்டனை என மாற்றியிருந்தால் கொஞ்சம் நம்பகத்தன்மை வந்திருக்கும். எல்லாவற்றிருக்கும் மரண தண்டனைதான் முடிவு என்றால் நாடு சுடுகாடாயல்லவா மாறிப் போகும்.

  4. விளையாட்டரங்க பூச்சுற்றலுக்கு[வார்த்தைக்கு நன்றி:மாண்ட்ரீஸர்] பதில் சேதுபதி ஐயா செய்ததைப் போல இவரும் பேசமால் Video Cassette-யே Sun-Tv,Vijay-Tv,Jaya-Tv-க்களுக்கு அனுப்பியிருக்கலாம். நிறைய ரசிக சிகாமணிகளின் மூளைச் செல்கள் இன்னும் சிறிது காலம் உயிருடனிருந்திருக்கும்.

  5. "பிரமாண்டவரின்" மற்ற படங்களில் என்னை பெரிதும் கவர்ந்தவை பாடல் காட்சிகளே, கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கும்படி ஏதேனுமிருக்கும். இப்படத்தில் பாடல்கள் எல்லாம் பப்படம் - "ரண்டக்க" தவிர [ மலை,சாலை,வீடு,ஊர்தி ஒவியங்கள் அருமை].

  6. நாயகனின் மற்றுருவங்களை திரையில் அறிமுக படுத்தும் முன் கொஞ்சம் "Suspense" வைத்திருக்கலாம். எருமை மாட்டின் மீதேறி முகம் தெரிய வருகையிலேயே தெரிந்துவிடுகிறது இவருக்கும் அம்பிக்கும் எதோ தொடர்புண்டென [ மன்மத பாத்திரத்திலும் அதே].

  7. அம்பி Scale வைத்து Margin போடும்போதே பக்கத்தில் இருப்பவரிடம் சொன்னேன், "என்ன இவன் Sub:காதலிக்க வேண்டி விண்ணப்பம்-னு எழுத போறானா?" - என்று, "காதல்"- தயாரிப்பாளர் புல்லரிக்க வைத்து விட்டார். ஏன் இவர் நாயகர்கள் எல்லோரும் காதலுக்காக சாலையில் செல்பவர்களை படுத்த வேண்டும் ? நாயகிகள் ஏன் அப்படியே கண்ணீர் மல்கி ஏற்று கொள்ள வேண்டும் ? [" ரோட்டை பார்த்து நடடா கடன்காரா"ன்னு செவிலில் விட்டிருக்க வேண்டாமோ?].

  8. ச்சாரி உபாயத்தால் கொஞ்சம் சிரித்தேன். சீயானை நிறையவே ரசித்தேன். கடைசியில் வரும் "தனி மனித தூதி" சார்ந்த வசனத்தை தவிர வாத்தியாரின் எழுத்து வித்தைகளும் கவர்ந்தன. "S"-ன் "பிரமாண்டத்திற்கு" வணக்கம், ஆனால் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் செதுக்கியிருந்தால் கவர்ந்திருக்கும்.


பி.கு-கள்:-

1) சங்கத்தால் தமிழ் வளர்த்து வரும் அருமை நண்பர்/பிகள் முதலாவதாய் சீட்டு வாங்கி முதலாவதாய் அரங்கிற்கு வரும் ரசிகர்/கைகளை அரங்கின் கட்டே கடைசியேரத்தில் அமர நிர்பந்திக்காமலிருந்தால் அவர்களுக்கு நித்திரை துறக்காமலேயே சொர்க்க வாசல் திறந்து உள்ளே நுழைய அனுமதி கிடைக்க பிரார்த்திப்பேன்.

2) தலைப்பை "மிருகினஜம்போ" ஸ்டைலில் படிக்கவும் :-)

4 Comments:

அச்சுபிச்சுத்தனமாக நடிப்பதும் நடிப்புதானே?

Wednesday, June 29, 2005 1:01:00 PM  

ஆமாம். ஆனால் மனநல மருத்துவராய் வருபவர் கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமாய் நடித்தால் நன்றாயிருந்திருக்கும்தானே?

Wednesday, June 29, 2005 1:20:00 PM  

நிம்பள்கி நம்பள் சொல்றான் இஷ்டைலு ரெமோ ஆங்கிலத்தை, ராஜசேகர் டப்பிங் படம் மாதிரியான நேரு ஸ்டேடிய பூச்சுற்றலை, துருத்திக்கொண்டு தெரியும் பாடல்களை, 'ரகசிய போலீஸ்' பிரகாஷ்ராஜின் பட்டிக்காட்டான் வேஷ அசட்டுத்தனங்களை, ஐந்து ரூபாய் கொடுத்தால் ஐம்பது ரூபாய்க்கு நடிக்கும் அவரது ஓவர் ஆக்டிங்கை, சர்க்கரை மூட்டை முழுவதையும் மொத்தமாக வாய்க்குள் திணிப்பது மாதிரி motion capture உத்தியை முப்பத்து முக்கோடித் தடவை காட்டியிருப்பதை, மகா மட்டமான பின்னணி இசையை என்று பட்டியல் மட்டும் போடத்தொடங்கினால், குறை மட்டும்தானா இருக்கிறது என்பார்கள்! ;-)

Fight Club & Se7en - சரியாகப் பிடித்தீர்கள்; இதுவரை யாரும் எழுதவில்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்!!

Wednesday, June 29, 2005 2:17:00 PM  

செ7ன்: Yahoo! Groups : RaayarKaapiKlub Messages : Message 11280 படம் பார்த்துவிட்டு மிச்ச மைக்ரோ பார்வைகள் :P)

Wednesday, June 29, 2005 2:53:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home