தடை
வகுப்புத் தோழனுடன்
பேசத் தடை.
பக்கத்து வீட்டு பையனைக்
காணத் தடை.
சச்சின் சிக்ஸரடித்தால்
துள்ளிக் குதிக்கத் தடை.
"சூப்பர் ஸ்டார்" திரையில் வந்தால்
விசிலடிக்கத் தடை.
ஆனால்,
பத்துப் பொருத்தம் பார்த்து பிணைத்த
பழகியறியாத ஆம்பிளையுடன்
முதல் நாளிரவே
படுக்கத் தடையில்லை....
4 Comments:
பார்த்து ரொம்ப நாளாச்சு போலிருக்குங்களே.... வாங்க வாங்க...
தங்கள் கவிதை படிக்க நன்றாக உள்ளது ஆனால், ஏதோ ஒரு நெருடல் இருக்கிறதே !
வீ எம்
வீ.எம் சொன்ன நெருடல் கடைசி பத்தி பற்றியது என்று நினைக்கிறேன்.
சொல்ல வந்த கருத்துக்கு ஒரு "ஓ" பொடுகிறேன்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home