மனைவி அமைவதெல்லாம்
பூமுகத்தின்(*) வாசலில்
சினேகம் விடர்த்தும்
பூந்திங்களானவள் மனைவி.
துக்கத்தின் முட்களை
பூவிரல் நுனியால்
புஷ்பங்களாக்குவாள் மனைவி.
எத்தனை முறை ஒளிர்ந்தாலும்
எண்ணை வற்றாத
சித்திரவிளக்கானவள் மனைவி.
எண்ணிக்கையில் தீராத
ஜன்மங்களில் என்றும்
அன்னதானேசுவரி மனைவி.
பூமியை விட
பொறுமையுள்ள
சொளபக்கியத்தேவியானவள் மனைவி.
மந்தகாச புன்னகையால்
சுட்டு நீறும் மனசில்
சந்தனம் சார்த்துவாள் மனைவி.
கண்ணீர்த்துளிகளில்
மழைவில்லை(*) வடித்தெடுக்கும்
பொன்னிறகதிரானவள் மனைவி.
காரியத்தில் மந்திரியும்
கர்மத்தில் தாசியும்
உருவத்தில் லட்சுமியுமாவாள் மனைவி.
(மம்முட்டி நடித்த ஒரு பழைய மலையாளத் திரைப்படத்தில் வரும் பாடல் இது. கருத்துச்சுவை குறையாமல் இருக்க பாடலில் வரும் சொற்களையே மற்றாமல் தந்திருக்கிறேன், சுவை குறைந்திருந்தால் அது முழுக்க முழுக்க என் கத்துக்குட்டித்தனமான மொழிப்பெயர்ப்பையேச் சாரும்.)
பி.கு 1: * பூமுகம் - வாசற்படிக்கருகில் உள்ள சிறிய அமரும் இடத்தை(SitOut) குறிக்கும். மற்றொரு அர்த்தத்தில் "பூ போன்ற முகம்" எனவும் படிக்கலாம்.
பி.கு 2: * மழைவில் - வானவில்.
பி.கு 3: வரும் 27ஆம் தேதி எனக்கு குருவாயூர் கோயிலில் திருமணம்.
வலைப்பதிவு நண்ப/நண்பிகள் எல்லோரும் வாங்க, வாழ்த்துங்க !
வழக்கம் போல் ஒரு மாத இடைவேளைக்கு பிறகு சந்திப்போம்.
15 Comments:
நல்வாழ்த்துக்கள்.இனிய இல்லறம் அமைய,விரும்பியபடி வாழ்க்கைக்க்துணை அமைய.hope u will post more details soon.
இனிய இல்லறம் அமைய வாழ்த்துக்கள்!!
வாழ்க பல்லாண்டு.
இன்பமும், அமைதியும் தழைத்தோங்கட்டும்
இல்லறம் நல்லறமாய் பல்லாண்டு வாழ்க!!!
இல்லறம் நல்லறமாய் பல்லாண்டு வாழ்க!!!
வாழ்த்துகள்!
Congratulations!
Congrats!
இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்!
சிறுவனின் வாழ்த்துக்களும்... :-)
ரா.சுவுக்கு இந்த ராசாவின் வாழ்த்துகள்.
ஏங்க! "ஒரு வாரத்திற்கு முன் என்னைப் பற்றி" அப்படின்னு தலைப்புக் கொடுத்திருக்கலாமே!... சரி, அத விடுங்க! இன்னும் ஒரு வாரத்தில் "மழைவில்"-ஆகறதுக்கான வாழ்த்துக்கள வாங்கிக்கிங்க!
:) யூனா
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு உளம் நிறைந்த நன்றி!
யூனா - திருமணம் ஆகஸ்ட் 27ஆம் நாள் நடந்தது.
வாழ்த்துக்கள்
vaazththukaL. pallaandu vaaza vaazththukiReen.
m.k
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home