வலைப்பூவிற்குள் மழை
வானிலை அறிக்கை: தமிழகம் மற்றும் சியாட்டல் மாநிலங்களில் கடந்த பல நாட்களாய் அடித்து வந்த மழைச்சாரல் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு வலைப்பூவிலும் இடியுடன் அல்லது செல்லமான புயலுடன் மிதமாகவோ அல்லது அடைமழையாகவோ பெய்ய(பொய்க்கவும்?) கூடும் என தமிழ்மணம் ஆய்வு மையம் இதன் மூலம் அறிவிக்கின்றது.
"மீனாக்ஸ்"காரர்கள்....மன்னிக்கவும் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க போக வேண்டாம் என்றும், மீறிப் போனால் நீங்கள் கருவாடாகி விடுவீர்கள் என்றும் இதன் மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது [சும்மா....தமாசு....:-)].
இந்த மழைச்சாரலை குடை பிடித்தோ நனைந்து கொண்டோ ஜன்னல் ஓரம் அமர்ந்து சூடான டீயை உறிஞ்சிக்கொண்டோ ரசிக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் வணக்கம்!.உங்களை குளிர்வித்தாலும் அல்லது ஜலதோஷம் வரவழைத்து துன்பித்தாலும் மேகத்தில்[பின்னூட்டத்தில்] தூது விடுங்கள்.
வலைப்பூவின் (முதல்) நட்சத்திரமாய் "ஜக்குபாய்" ரஜினியின் மருமகன் சுள்ளானைப் போல அதிரடியாய் கலக்கிச் சென்றிருக்கிறார் பிருந்தாவனத்தவர். பயமாகத்தான் இருக்கிறது, இந்த கேமரா வெளிச்சம் நமக்கு புதுசு பாருங்க. முடிஞ்சளவிற்கு சொதப்பாமல் நடிக்கிறேன். ரசிக மன்றங்கள் எல்லாம் வைக்க வேண்டாம் [ ரொம்ப முக்கியம் :-)], அடிக்க "வண்டி" அனுப்பாமல் இருந்தால் போதும்[:-)]
இயக்குனரும்[காசி] casting இயக்குனரும்[மதி] நான் வெட்டியாய் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து முறைக்கிறார்கள்[:-)].
அதனால்......மீதியை வெள்ளித்திரையில் காண்க! [ திருட்டு விசிடியில் அல்ல..]
START CAMERA....ACTION...!
7 Comments:
வாங்க வாங்க !!!! முதல் பெண் நட்சத்திரம்! வாழ்க!!
மகளிரணி சார்பாக இந்த மலர்மாலையை அணிவிக்கின்றோம்!
ஒரு கலக்கு கலக்குங்க!!
என்றும் அன்புடன்,
துளசி.
அசத்தலான ஆரம்பம். வாழ்த்துக்கள்
முஃப்தி
வணக்கம்.
இந்தவாரம் இனிமையாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களிடம் இங்கு எழுத நிறைய விஷயம் இருக்கிறது, உணர்வுமயமான எண்ணம், எழுத்து, நடை இருக்கிறது. நேரம்/காலம்/இன்ன பிற காரணம் கூறி அவ்வப்போது எழுதி வந்த நீங்கள் இந்த வார நட்சத்திரம் என்ற அறிவிப்பின் மூலம் இன்று தினம் எழுதும் கட்டயாத்தில் தள்ளப்படுவதால் நாங்கள் கொடுத்துவைத்தவராகிறோம்.
வாழ்த்துக்கள், அருமையான சாரலில் நனைய காத்திருக்கிறோம். நன்றி
மழைச்சாரலில் நனைவது பிடித்தமானதொரு விடயம்.தூறலுக்குக் காத்திருக்கிறேன்
வாங்க வாங்க!
இன்னிசை மழை பொழிய ஒரு எம்.எஸ்.சுப்புலட்சுமி போல,
இணையத் தமிழ் மழை மொழிய வரும் ரா.சுப்புலட்சுமிக்கு
வந்தனம்.
ரண்டி! ரண்டி! ஒச்சே வாரம் அந்த்தா நறுக்கி பெட்டேயண்டி (ஹி.ஹி தெலுங்கு! தெலுங்கு!)
மீனாக்ஸ்காரர்கள் மேல அப்படி என்னங்க கோபம். நாங்க பாட்டுக்கு ஒரு ஓரமா "சிவனே"ன்னு இருக்கோம்.
மீனாட்சி,
தப்பா எடுத்துக்காதீங்க..ஒரு சொல்லாடலுக்காக பயன்படுத்திகொண்டேன். :-)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home