எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Thursday, September 23, 2004

0 டிகிரி

சமீபத்தில் இந்தியா சென்று வரும்போது சில நல்ல புத்தகங்கள் வாங்கி வந்தேன் [ நன்றி: திலீப் ( dilipbooks@eth.net ) ]. நண்பன் ஒருவனின் பலத்த சிபாரிசின் பேரில் சாரு நிவேதிதா எழுதிய "0 டிகிரி" நாவலையும் வாங்கினேன். தமிழ் இலக்கிய உலகில் சலசலப்பை உண்டாக்கிய புத்தகமென நண்பன் கூறியதின் உண்மையை அறிய விமானத்திலும் வீட்டிலுமாக படித்து முடித்தேன்.

முதலில் நாவலுக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் புதுவையின் பேச்சு வழக்கில் வரும் "பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுப் போல்" ஒரு கலவையாக இருந்தது. கடைசி சில அத்தியாயங்களையும் (அவந்திகாவின் கடிதமும் மகளுக்கான கவிதை-கடிதங்களும்) ஒரு முஸ்லீம் பெண்ணின் வாழ்க்கை குறிப்படங்கிய அத்தியாயத்தையும் (ஆபிதீனிடமிருந்து சுட்ட பழமோ?) தவிர்த்துப் பார்த்தால் மனதை தொடக்கூடியவை இப்புத்தகத்தில் எதுவுமில்லை.

படிப்பவர்கள் கொஞ்சமேனும் அதிர்ச்சியடைய வேண்டுமென மெனக்கெட்டு "மஞ்சள்" பத்திரிக்கையை விட மோசமான வார்த்தைகளால் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் புனிதத்தை கேவலப்படுத்தி எழுதியிருப்பதில் சாரு வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறேன்.

இந்த நாவலில்....மன்னிக்க....புத்தகத்தில் வரும் பாத்திரங்களான செத்தமூளை, முனியாண்டி, உத்தம தமிழ் எழுத்தாளன், தாயுமானவன் பற்றிய குறிப்புகள் எதை உணர்த்த வருகின்றன என்பது என் சிற்றறிவுக்கு புரியவில்லை[ புரிந்தவர்கள் யாரேனும் பொழிப்புரை வழங்கினால், சாருவின் பெயரிட்ட ஒரு பேன்சி பனியன் பரிசாய் தரப்படும்].

என்னதான் "என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு" என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சாருவின் வாழ்க்கையை இந்த புத்தகத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை[ நன்றி: அவருடைய கோணல் பக்கங்கள் - நாவல் படிப்பதற்கு முன் படித்து பார்க்கச் சொன்னான் நண்பன்].

அழகியல் மருந்தளவேணுமில்லாத அருவருப்பான எழுத்தாக உள்ளமையால் இலக்கிய உலகில் இப்புத்தகம் சலசலப்பை உண்டாக்கியிருக்குமென நினைக்கிறேன். சிபாரிசு செய்த நண்பனை தொலைப்பேசியில் பிடிக்க முடியவில்லை.

அடுத்த முறை இந்தியா செல்கையில் இருக்கிறது அவனுக்கு !!




5 Comments:

Welcome back! :)

recommend senchavar unga friend'a enemy'a? ;)

Thursday, September 23, 2004 7:01:00 PM  

இதுப்போல் புத்தகங்களைத் தொடர்ந்து சிபாரிசு செய்தான் என்றால் சீக்கிரம் அவன் எதிரியாகிவிட வாய்ப்புள்ளது :-) .

Thursday, September 23, 2004 7:14:00 PM  

அவரது கோணல் பக்கங்களும் அப்படித்தான்.எழுத்து பூராவும் மஞ்சள்..

Thursday, September 23, 2004 10:50:00 PM  

வாங்க கண்ணால பொண்ணு. கண்ணாலம் கட்டின பொறவு நல்ல பொஸ்தகம் தான் படிச்சிருக்கிங்க :-))

Saturday, September 25, 2004 4:49:00 AM  

இந்த புத்தகத்தைக் குறித்த எழுத்தாளர் இ.பா வின் மதிப்பீடு இன்று வாசிக்க கிடைத்தது - நீங்களும் வாசித்து பாருங்கள் : http://www.charuonline.com/Zero1.html

Sunday, September 26, 2004 11:20:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home