அம்மா ஒரு கொலை செய்தாள்
நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான கதையை இன்று தான் படித்தேன். படித்த பின் வெகு நேரத்திற்கு மனதில் ஏதோ பாரம் ஏற்றி வைத்தது போல் இருக்கிறது. கண்ணீர் வராமல் கண்கள் எரிகின்றன, தெண்டை வலிக்கிறது. புனைக்கதை தான், ஆனாலும் அந்த "கருப்பி"யின் நிலையில் என்னை நிறுத்தி பார்த்து வாசித்த மனம் பதறுகிறது.
அவள் விரும்பியது எல்லாம் ஆறுதலான சில வார்த்தைகள், மெல்லிய அரவணைப்பு, மனசுக்கும் மலர்ச்சி தரக்கூடிய ஒரு விளக்கம் அவ்வளவே!. அதுவும் மென்மையாக இருக்க வேண்டிய "அந்த" பொழுதில் அதுவரை எல்லாமே "அழகு" என செல்லம் தந்த தாயிடமிருந்து சுடு சொற்களாய் வந்து விழ அந்த மலர் மட்டுமல்ல, நானும் கருகித்தான் போனேன்.
எத்தனை வில்லங்கமான கேள்விகள் கேட்டாலும் அன்பொழுக சின்னச் சின்ன கிண்டலுடனும் எளிய விளக்கங்களுடனும் ஐயங்களையும் பயங்களையும் தீர்த்த என்னுயிர் தோழி - எந்தாயை நினைத்து பார்த்து மனம் நன்றி சொல்லியது.
அம்பை ! .....சத்தியமாய்.. கொன்னுட்டீங்க போங்க !
[ "சிறகுகள் முறியும்" - சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது இக்கதை ]
6 Comments:
i think this stry was published in 1976.so u were born in 1981.so ur 23 years old.right
அந்தக்கதையை தேடிப்படிக்கமுடியும் என்று தோணவில்லை.முடிந்தால் உங்களைப்பாதித்த ஒரு சில உரையாடல்/கதை பகுதிகளையாவது நேரமிருக்கும்போது பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Anonymous - You are wrong! This story is published much earlier than 1976 :-)
அன்பு : முக்கிய உரையாடல்களை பிறகு பதிகிறேன். வலையுலகில் இக்கதை கிடைக்குமா எனத் தேடியும் பார்க்கிறேன். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுதி இது. உங்களுக்கு விருப்பமிருந்தால் திரு. திலீப்பை ( dilipbooks@eth.net ) தொடர்புக் கொண்டு வாங்கலாம்.
want to hear amabi reading a portion of her own work -
see details in http://chinthanai.blogspot.com/
நன்றி ரவி !
அன்பு : அம்பையின் குரலிலேயே இக்கதையை இங்கு(http://lcweb2.loc.gov/mbrs/master/salrp/01801.mp3) கேட்கலாம்.
அன்புடன்
நான் அம்பையின் "அம்மா ஒரு கொலை செய்தாள்" கதையை தேடிக்கொண்டிருக்கின்றேன். தயவு செய்து அந்தக் கதையின் நகலையோ அல்லது அதற்கான லிங்கையோ தர முடியுமா. மிகவும் அவசரமாகத் தேடுகின்றேன்.
பிறின்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home