பிரிவு என்பதே உறவுக்காகத்தான்..(H4 Visa Issue)
கடந்த 5 வார காலமாக என் துணையைப் பிரிந்து இருக்கின்றேன். காரணம் - H4 விசாவிற்காக நேர்முகத் தேர்வில் சென்னை விசா அலுவலகத்தில் எங்கள் திருமண பதிவு சான்றிதழ் பற்றி கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் அளிக்க முடியாததால், 221(g) படிவம் வழங்கப் பட்டு "Your case requires additional administrative processing.Once the process is complete, this office will contact you with further instructions." எனச் சொல்லி அனுப்பி விட்டார்கள்.
யாகூ குழுமத்திலும் மற்ற விசாப் பற்றிய இணையத்தளங்களிலும் இதுப்பற்றித் தேடினால், சென்னை அலுவலகத்திலிருந்து தகவல் வர எட்டு முதல் பத்து வாரங்கள் வரை ஆகும் என்று ஒரு சாராரும் இல்லை..இல்லை...மாத கணக்கில் ஆகும் என வேறு சாராரும் கருத்துக்கள் கூறி குழப்புகிறார்கள். மண்டை காய்கிறது!.
நம் வலைப்பதிவு நண்ப/பிகளுக்கு யாருக்கேனும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? முக்கியமாக எத்துனை காலம் நீங்கள் தகவலுக்காக காத்திருந்தீர்கள் என்பதையும் முடிந்தால் கொஞ்சம் விலாவாரியாக உங்கள் அனுபவத்தையும் பின்னூட்டத்தின் வழியாகவோ அல்லது மின்மடல் ( rsubbulatchoumi@hotmail.com ) வழியாகவோ பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்வேன்.
ஒரு சிலர் சென்னையில் ஒரு நல்ல குடிநுழைவு வழக்கறிஞரை அணுக அறிவுறுத்துகிறார்கள். இன்னும் ஒரிரு வாரங்களில் ஏதும் நடக்கவில்லை எனின், அணுகலாம் என்று நினைக்கின்றோம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க ?
6 Comments:
வணக்கம்.
மன்னிக்கவும், எனக்கு நேரிடையாக இதுவிஷயமாக தகவல் ஏதும் தெரியவில்லை. முடிந்தவரை வலையிலோ, நண்பர்கள் மூலமாகவோ விசாரிக்க முயற்சிக்கிறேன். அதுவரை உங்களின் ஆதங்கத்தில் பங்கெடுப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. இங்கு யாருக்காவது தெரிந்திருக்கிறதா என்று பார்க்கலாம். விரைவில் இந்த சிக்கல் தீர்ந்து, மணவாழ்வு தொடர வாழ்த்துக்கள்.
கவலைவேண்டாம் சுப்புலக்ஷ்மி. நல்லபடியாகவே முடியும். இந்தப் பிரிவு உங்கள் அன்பை மேலும் வளர்க்க உதவும்.
அன்புடன்,
துளசி.
எந்த அளவுக்கு என்னுடைய பதில் உதவும் என்பது ஐயமே,இருப்பினும்..
அமேரிக்க குடிமகனாக இல்லாமல் இருந்த 1986ல்,இந்திய குடிமகளான என்னுடைய மனைவி குடியேற்ற உரிமம் பெற 19 மாதங்களாயிற்று.h4 குடியுரிமம் பற்றித் தெரியாது.ஆயினும்,வேறு வகை உரிமங்களைப் பெறுவதில் தடைகளுண்டு என்பதைத் தெரிவிக்க எண்ணினேண்.திருமணம் முடிந்து நானும்,மனைவியும் கிட்டடதட்ட ஒன்றரை வருடங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தோம்.
அனுப்புநர்: வாசன்
221g is temporary refusal. 221g is issued when they require further processing of your application, maybe additional documents or information from other departments. If refused, you should soon get a letter with appropriate boxes checked as to why the application has been refused. But there is also a good possibility that your application gets approved. Chennai consulate has become very stringent with regards to H4 visas.
Usually a 221g is issued for H4 when one of the following is not present
[1] Marriage certificate
[2] Marriage Photographs (Initially they accepted 10 - 15 photographs of the ceremony, but now they demand the whole album. The photographs should have the ceremonies and audience present during the ceremony. Any attorney/travel agent would furnish you the kind of photographs they expect.)
[3] Original / Notorised copy of the beneficiary's H1. (Apart from form I-797 ask your hubby's labor documents)
[4] Supporting letter from the beneficiary's (your Husband's) employer.
[5] Copy of your Husband's passport (notarized)
[6] Husband's previous 3 years tax returns (this is sometimes asked)
[7] Husband's paystub (get atleast 1 year worth of paystubs).
Once you receive the letter, schedule the next interview or I think you can use the TTS drop box (usually they mention if you can avail the drop box facility). But make sure you provide all the above documents.
hth
drop me a mail if u need more info dynobuoy(a)yahoo
-dyno
அன்பு, துளசி - உங்கள் ஆறுதலுக்கு நன்றி!
வாசன் - தகவலுக்கு நன்றி!
டைனோ - நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் நேர்முகத் தேர்விலேயே சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் திருமண சான்றிதழின் மேல் ஐயம் கொண்டு 221g தந்து இருக்கிறார்கள். கால அவகாசம் பற்றி தங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
This comment has been removed by a blog administrator.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home