மேகத்திடம் ஒரு கேள்வி - "அகரத்தூரிகை" அருண்
நம் தமிழ் வலைப்பதிவுலகின் பிரபலங்களிடம் கேட்க நினைத்த ஒரே கேள்வி இங்கு வெளியிடப்படும், பின்னூட்டம் மூலமாகவோ அல்லது என் மின்னஞ்சல்[ rsubbulatchoumi@hotmail.com ] மூலமாகவோ தலைவர்/விகள் பதிலுரைத்தால் மகிழ்வேன்/வோம்.
"அகரதூரிகை" அருண், ஆங்கில குறும்படங்களை இயக்கி வரும் நீங்கள் எப்போது தமிழ் (அல்லது HOLLYWOOD ?) திரையுலகிற்கு பிரவேசமாக உத்தேசம் (இருக்கிறதா?) ?
[ஒரே கேள்வியில் பல கேள்விகளை சொருகி விட்டேன், மன்னிக்க :-) ]
3 Comments:
அன்புள்ள சுப்புலஷ்மி,
வணக்கம். தங்களின் கேள்வி படித்தேன். நேற்று தான் நடிகர் சூர்யாவுக்கு நான் சொன்ன கதை மிகவும் பிடித்தது என்றும், ஏ.எம்.ரத்னம் அதைத் தயாரிப்பதற்கு ஆர்வமாய் இருப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல்...Dream Works நிறுவனத்திற்காக நான் ஏற்கனவே செய்ய இருந்த ஆங்கில-இந்திய கலப்புத் தயாரிப்பு இன்னும் சிறிது மாதங்களில் ஆரம்பிக்கப்பட இருப்பதால், மேற்கூறிய தமிழ்ப்படம் தள்ளிப்போகும் போல் உள்ளது.
மேடம்...இப்படியெல்லாம் பக்காவாய்ப் படம் காட்டலாம் தான்...ஹி..ஹி...ஆனா, எல்லாத்துக்கும் ஆண்டவன்னு ஒருத்தன் மனசு வெக்கணும் இல்லை! அவன் என்ன சொல்றான்னா...நீ பண்றதை ஒழுங்காய்ப் பண்ணிக்கிட்டு வா, மத்ததை எங்கிட்டே விடுன்னு நச்சுனு சொல்லிட்டார். இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு...ஆனா, உங்களோட அன்புக்கும், ஆர்வத்துக்கும் நன்றி.
- அழியா அன்புடன் அருண்
அருண் :-))
கதை சொன்னது உண்மையாக வாழ்த்துக்கள்.
-காசி(லிங்கமேதான்)
அருண்,
பதிலுக்கு நன்றி! நீங்கள் நினைப்பது யாவும் கைகூட உளம் கனிந்த வாழ்த்துக்கள்!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home