தேர்தலாம் தேர்தல்
ஆளுயர "கட்-அவுட்"டுகளில்லை.
மின்சார கம்பங்களில் கட்சிகளின் தோரணங்களில்லை.
வண்ண வண்ணமாய் அலங்கரிக்கும் சுவரொட்டிகளில்லை.
வாக்களிக்க விடுமுறையில்லை.
வாக்களிக்க கொண்டுபோக "கட்சி" சார்பு வாகனங்களில்லை.
வாக்களித்தால் இலவச டாலருமில்லை, பிரியாணியுமில்லை,"தண்ணி"யுமில்லை.
வாக்குப்பதிவு இடங்களில் சோடா பாட்டில், வெடிகுண்டு கலவரமில்லை.
வாக்குப்பெட்டிகள் களவாடப்படவில்லை.
கள்ள வோட்டு போடும் மக்களுமில்லை.
என்னதான் தேர்தலோ இது......?
பி.கு: மதில் மேல் பூனையாகத்தான் முடிவுகள் இருக்குமென ஊடகங்கள் சொல்கின்றன[Electoral Vote Predictor 2004: Kerry 262 Bush 261], இரவிற்குள் தெரிந்துவிடும்.
1 Comments:
பிரித்தானிய ஊடகங்கள் இன்று வழங்கிய செய்திகளை பார்த்ததில், வாக்காளர்களை அழைத்து செல்ல (கட்சி சார்பு) வாகனங்களும், மரித்தவர்கள் மீண்டெழுந்து வந்து போட்ட (கள்ள) ஒட்டுகளும் உண்டென அறிகிறேனே!!? அது உண்மையா!!!?
--
நவன் பகவதி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home